பாபநாசம் அணையில் குடிநீருக்காக 200 கனஅடி திறப்பு
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம்63.85 அடியாக
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம்63.85 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துவருகிறது. இன்ரைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 8 மி.மீமழையும், பாபநாசம் கீழ் அணையில் 1 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 6மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 2.6 மி.மீ மழையும், கடனாநதி அணையில்4.5 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 687.29 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1.30 அடி உயர்ந்து 63.85 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்புடுகிறது.சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 79.40 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71.00 அடியாகவும் இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 52 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில்இருந்து 275 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 41.00 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 25கனஅடி நீர்வரத்து இருந்தது. ராமநதி அணைக்கு விநாடிக்கு 40 கனஅடி நீர்வரத்து இருந்தது.
பராமரிப்பு பணிகளுக்கு சில தினங்களுக்கு முன் பாபநாசம்,சேர்வலாறு அணைகள் மூடப்பட்டன. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து நாளை(வியாழக்கிழமை) 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது..