சிதம்பரத்தில் பல்வேறு இடங்களில் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் கைது: இருபத்து எட்டரை பவுன் நகைகள் மீட்பு
சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான
சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நகைகளை பறித்து வழிபறியில் ஈடுபட்ட இளைஞரை நகர போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து இருபத்து எட்டரை பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்.
சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான டெல்டா தனிப்படை போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சிதம்பரம் கடலூர் சாலையில் பைசல் மஹால் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த கிள்ளை அழிச்சிக்குடியைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் செந்தில் (22) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் 4 இடங்களில் செயின் பறித்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்ததாவது: கிள்ளை அழிச்சிக்குடி தற்போது வசித்து வரும் செந்தில்லின் சொந்த ஊர் உசுலம்பட்டியாகும். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். அதே வேளையில் சிதம்பரம் தெற்குவீதி ஆட்டோ நிறுத்த்தில் ஆட்டோவை வாடகைக்கு வீட்டுள்ளார். இந்நிலையில் போலீஸாரால் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்ட செந்திலை விசாரணை மேற்கொண்டதில் அண்ணாமலைநகரில் ராணி என்ற நர்சிடம் மிளகாய் பொடி தூவி 8 பவுன் செயினையும், சிதம்பரம் மேலவீதியில் செல்லையா என்பவரது மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து 9 பவுன் நகைகளையும், பச்சையப்பன் பள்ளித்தெருவில் சேதுஸ்கேன் மருத்துவமனையில் ஹேமலதாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ஐந்தரை பவுன் செயினையும், சிவசக்திநகரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மனைவி செல்லத்தாயிடம் 6 பவுன் செயினையும் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து செந்திலை கைது செய்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் இருபத்து எட்டரை பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீஸார் செந்திலை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் என அவர் தெரிவித்தார்.