முகப்பு
தற்போதைய செய்திகள்

வி.கே. புரம் நகராட்சி ஆணையரை கண்டித்து தலைவி, உறுப்பினர்கள் திடீர் போராட்டம்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வருவாய் உதவியாளராக பணி செய்து வரும் சு.வேல்முருகன், புதிய வரி விதிப்பு, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம்பெயர் மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:11 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம்,விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சி ஆணையரை கண்டித்து தலைவி, துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வருவாய் உதவியாளராக பணி செய்து வரும் சு.வேல்முருகன், புதிய வரி விதிப்பு, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம்பெயர் மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.இதையடுத்து இம்மாதம் 7 ம் தேதி நடைபெற்ற நகராட்சி அவசரக் கூட்டத்தில் வருவாய் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து சு. வேல்முருகன் தற்காலிக பணியிடை நீக்கம்செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளர் சு.வேல்முருகன் இன்று பணியில் சேர ஆணையர் பி. அயூப்கான் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து நகராட்சித்தலைவி இ. மனோன்மணி (அதிமுக), துணைத் தலைவர் தி. கணேசபெருமாள் மற்றும் 15 உறுப்பினர்கள் நகராட்சியில் தலைவி அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டம் மாலை வர நீடித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →