முகப்பு
தற்போதைய செய்திகள்

பாசனத்திற்கு அணைத் திறப்பதில் தாமதம்: கலக்கத்தில் விவசாயிகள்

தாமிரவருணி பாசனத்தில் இரு போகம் விவசாயம் செய்யப்படுகிறது. தென்மேற்குபருவ மழைக் காலத்தில் பயிரிடும் முறையை கார் சாகுபடி என்றும், வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பிசான சாகுபடி என்றும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:12 PM
பகிர்:

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 72.60 அடியாக உயர்ந்த போதிலும் கார் பருவ சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. கார் சாகுபடி தாமதமாக வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தாமிரவருணி பாசனத்தில் இரு போகம் விவசாயம் செய்யப்படுகிறது. தென்மேற்குபருவ மழைக் காலத்தில் பயிரிடும் முறையை கார் சாகுபடி என்றும், வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பிசான சாகுபடி என்றும் அழைக்கப்படுகிறது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்று பருவங்களில் நீர்வரத்து கிடைப்பதால் தாமிரவருணி பாசனத்தில் விவசாயம் செழித்து விளங்குகிறது.இப்பாசனத்தில் பாபநாசம் அணையில் 11 கால்வாய்கள் மூலம் திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டத்தில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.மணிமுத்தாறு அணையின் மூலம் 24,310 ஏக்கர் நிலங்களும், கடனாநதி அணையின்மூலம் 9324 ஏக்கர் நிலங்களும், ராமநதி அணையின் மூலம் 4943 ஏக்கர்நிலங்களும் பாசனம் பெறுகிறது.

இது தவிர மணிமுத்தாறு பெருங்கால் மூலம் 2586 ஏக்கர் நிலங்கள் பாசனம்பெற்று வருகிறது. மணிமுத்தாறு பிரதான கால்வாய் மூலம் 308 குளங்கள் வழியாகபிசான பருவத்தில் 22,852 ஏக்கர் நிலங்களும் ஒருபோக பாசன வசதி பெறுகின்றன.கார், பிசான சாகுபடி நீ்ங்கலாக தாமிரவருணி ஆற்றின் கடைப் பகுதியில்மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் கீழ் உள்ள இரு போக பாசனப்பகுதியில் பழந்தொழி (முன் கார் பருவ சாகுபடி) எனும் சிறப்பு சாகுபடிக்கு அணைகளின் நீர் இருப்பை பொறுத்து ஏப்ரல், மே மாதங்களில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறி பெய்யும் மழையினால் தாமிரவருணிபாசனத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால் சாகுபடி செய்த நெல்,வாழை போன்ற விளைப் பொருட்களை விவசாயிகள் கரை சேர்க்க முடியாமல் திணறும்நிலை காணப்படுகிறது. பருவ நிலை மாற்றத்தினால் அறுவடை செய்யும் பருவத்தில்நெல், வாழைப்பயிர் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை

ஏற்படுத்துகிறது.இன்று பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 72.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில்40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அணையி்ல் இருந்து விநாடிக்கு 205 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் கீழ் அணையில் 14 மி.மீமழையும், சேர்வலாறு அணையில் 36 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 89.99 அடியாகவும்,மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.30 அடியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 203 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 6.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →