முகப்பு
தற்போதைய செய்திகள்

பேரூராட்சிகளில் துப்புரவு பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க கோரிக்கை

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்  மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் தலைமையில் வடலூரில் அண்மையில் நடந்தது. பாஸ்கர் வரவேற்றார். சிஐடியூமாநில பொதுச்செயலர் சுகுமாறன், மாநில சம்மேளனத் தலைவர் மூசா, பொதுச்செயலர் கணேசன், இணைச் செயல

Updated On : 18 ஜூன், 2013 at 4:51 PM
பகிர்:

பேரூராட்சிகளில் காலியாக உள்ள துப்புரவு தொழிலாளர் பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்  மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் தலைமையில் வடலூரில் அண்மையில் நடந்தது. பாஸ்கர் வரவேற்றார். சிஐடியூமாநில பொதுச்செயலர் சுகுமாறன், மாநில சம்மேளனத் தலைவர் மூசா, பொதுச்செயலர் கணேசன், இணைச் செயலர் வீராசாமி, சிஐடியூ மாவட்டத் தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர்.

கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்புத் தலைவராக கருப்பையனும், மாவட்டத் தலைவராக பாஸ்கர், செயலராக திருமுருகன், பொருளாளராக சக்திவேல் மற்றும் 22 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement

கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப போதிய எண்ணிக்கையில் துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.  இறந்த, ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்டுள்ள துப்புரவு தொழிலாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பேரூராட்சிகளில் உள்ள துப்புரவு பணியாளர் காலி இடங்களில் சுயஉதவிக்குழு துப்புரவு பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.  கடலூர் மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களின் பழுதடைந்துள்ள வீடுகளை மராமத்து செய்திடவும், புதிய தொகுப்பு வீடுகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.