முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீமந்நாதமுனிகள் ஜெனன மஹோற்சவம் நாளை தொடக்கம்!

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அளித்த ஸ்ரீமந்நாதமுனிகள் 1190வது ஜெனன மஹோற்சவம் நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார்கோயில் சதுர்வேதிமங்கலத்தில் (குப்பங்குழி) ஸ்ரீநாதமுனிகள், ஸ்ரீஆளவந்தார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:15 PM
பகிர்:

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அளித்த ஸ்ரீமந்நாதமுனிகள் 1190வது ஜெனன மஹோற்சவம் நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார்கோயில் சதுர்வேதிமங்கலத்தில் (குப்பங்குழி) ஸ்ரீநாதமுனிகள், ஸ்ரீஆளவந்தார் அவதாரத் திருமாளிகையில் நாளை (ஜூன் 19) திருக்கல்யாணம் உற்சவத்துடன் தொடங்குகிறது.

உற்சவ விபரம்: ஜூன் 20-ம் தேதி நாதமுனிகள் எழுந்தருளி திருப்பல்லாண்டு தொடக்கம், 21-ம் தேதி திவ்யபிரபந்த சேவை சாற்றுமுறை, அனுஷம் சிறப்பு வழிபாடு, 22-ம் தேதி அன்னம் பற்றிய சொற்பொழிவு, திவ்யபிரபந்த சேவை சாற்றுமுறை, 23-ம் தேதி கண்ணிநுண் சிறுத்தாம்பு பற்றிய சொற்பொழிவு, திவ்யபிரபந்த சேவை சாற்றுமுறை, 24-ம் தேதி திவ்யபிரபந்த சேவை சாற்றுமுறை, தேவாகன திவ்யபிரபந்த இசை நிகழ்ச்சி, 25-ம் தேதி காலை திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை சாற்றுமுறை திவ்யதேச பகுமானங்கள். ஜூன் 25-ம் தேதி திருக்கோவிலூர் ஸ்ரீமந் ஜீயர் சுவாமிகள், ஏ.வி.ரெங்காச்சாரியார், ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, சென்னை சதுர்வேதி சுவாமி ஆகியோரின் சொற்பொழிவு நடைபெறுகிறது. உற்சவ ஏற்பாடுகளை ஸ்ரீமந் நாதமுனிகள் சபா தலைவர் எஸ்.சீனுவாசநாராயணன், தோத்தாத்திரி மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →