திருவண்ணாமலையில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது
திருவண்ணாமலையில் மானை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.
திருவண்ணாமலையில் மானை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.
திருவண்ணாமலையை அடுத்த கவுத்திக்காப்புக்காட்டில் திருவண்ணாமலை வனச்சரகர் கருணா மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்களை பார்த்த 4 பேர் கொண்ட கும்பல் தப்பியோடினர். இதையடுத்து, அதிகாரிகள் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். ஒருவர் மட்டும் ஓடிவிட்டார்.
பிடிபட்ட 3 பேரிடம், புள்ளி மான் தோல் இருந்தது. அவர்கள் நான்கு பேரும், புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி தோலையும், கறியையும் தனியாக பிரித்து எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (51), கீழ்படுர் பகுதியைச் சேர்ந்த முருகேன் (43), மணிகண்டன் (41) ஆகியோரிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மான் தோல் பறிமுதல் செய்யப்பட்டது.
மான் கறி வைத்திருந்தவர் தப்பியோடிவிட்டார். அவர் பெயர் ஆறுமுகம் என்பது தெரிய வந்துள்ளது. அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.