முகப்பு
தற்போதைய செய்திகள்

தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை ஒப்படைத்த பெண்

தொட்டில் குழந்தை திட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தைய ஒப்படைத்தார்.

Updated On : 23 ஜூன், 2013 at 12:18 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:56 PM

தொட்டில் குழந்தை திட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தைய ஒப்படைத்தார்.

 கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தையுடன் சமூகநலத்துறை அலுவலகத்துக்கு அண்மையில் வந்தார். தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை சேர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

 இளம்பெண் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்ததால் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி குழந்தையை அரசுத்தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்துக்கொண்டார்.

Advertisement

 பின்னர் உள்நாட்டு தத்துக்கொடுக்கும் நிறுவனத்திடம் குழந்தை  ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) ராஜேந்திரன் குழந்தைக்கு காமராஜ் என பெயரிட்டு தொண்டு நிறுவன ஊழியர் தாமஸ் என்பவரிடம் வழங்கினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்திரவிச்சந்திரன் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.