முகப்பு
தற்போதைய செய்திகள்

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கிறது

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்துவருகிறது. இதை தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.இன்றைய காலை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:26 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 100அடியை எட்டும் நிலையில் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்துவருகிறது. இதை தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.இன்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 1 மி.மீ மழையும்,சேர்வலாறு அணையில் 4 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 5.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 5 மி.மீ மழையும், ராமநதி அணையில் 4 மி.மீமழையும், அம்பாசமுத்திரத்தில் 16.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3083.22 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 97.00 அடியாக இருந்தது. அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக 1005 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு்ள்ளது. அணைக்கு நீர்வரத்து 3,000 கனஅடியாக இருப்பதால் நீர்மட்டம் 100 அடியை எட்டும் நிலையில் உள்ளது.சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 112.20 அடியாகவும்,மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.43 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 115 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 275 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.

கடனாநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 72.50 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 321 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருப்பதால் 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.ராமநதி அணை நிரம்பியுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 82.00 அடியாகஇருந்தது. அணைக்கு விநாடிக்கு 141 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 73 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →