மளிகைக் கடை ஊழியர் மர்மச் சாவு
தூத்துக்குடி மாவட்டம் பழங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மனைவி விக்டோரியா. இவர்களது மூத்த மகன் சாம்ராஜ் (23). இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் தங்கி, அருகேயுள்ள ஒரு மளிகைக்
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மளிகைக் கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் பழங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மனைவி விக்டோரியா. இவர்களது மூத்த மகன் சாம்ராஜ் (23). இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் தங்கி, அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் சாம்ராஜ், வேலைக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது சாம்ராஜ், மர்மமான முறையில் படுக்கையில் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாம்ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement