முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பாசனத்துக்கு

Updated On : 23 ஜூன், 2013 at 6:29 PM
பகிர்:

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று வினாடிக்கு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பாசனத்துக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு மிக மோசமான அளவில் நீர் இருப்பு உள்ளது.இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அது கடந்த சில நாள்களுக்கு முன்பு வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அணையின் நீர்மட்டம் 15.93 அடியாகவும், நீர் இருப்பு 3.01 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 85 கன அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.