முகப்பு
தற்போதைய செய்திகள்

தீக்குளித்து இளம்பெண் சாவு

ஆம்பூர் அருகே தீக்குளித்த இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

Updated On : 24 ஜூன், 2013 at 11:57 PM
பகிர்:

ஆம்பூர் அருகே தீக்குளித்த இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

ஆம்பூர் அருகே நரியம்பட்டை சேர்ந்தவர் பஷீர் அஹமத் மனைவி நசிமா (வயது 27).   அவர்களுக்கு கடந்த 10 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.  நசிமா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த ஜூன் 19ம் தேதி நசிமா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.  காயமடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisement

இதுகுறித்து உமராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.  ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.