நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த கணவர் கைது
சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் காவல் சரகத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம், கூலித் தொழிலாளியான அவரது மனைவி பெயர் தேவகி 934). இவர்களுக்கு ஒரு மகன், மகள்
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிதம்பரம் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் காவல் சரகத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம், கூலித் தொழிலாளியான அவரது மனைவி பெயர் தேவகி 934). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி தேவகியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடை தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஜீவானந்தத்திற்கும், தேவகிக்கும் இடையே நள்ளிரவில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜீவானந்தம் கத்தியால் மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு தலைமறைவானார். இதில் படுகாயமுற்ற மனைவி தேவகி இறந்தார். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் வழக்குப் பதிந்து அதே பகுதியில் பதுங்கியிருந்த ஜீவானந்தத்தை கைது செய்தனர்