தற்போதைய செய்திகள்

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் பாலுச்சாமி, நகர செயலாளர் காதர்மொய்தீன் உள்ளிட்டோர்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பில் விடுபட்டுப்போன விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் பாலுச்சாமி, நகர செயலாளர் காதர்மொய்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், வறட்சி நிவாரணக் கணக்கெடுப்பில் பெயர்கள் விடுபட்டுப்போன விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பழனிக்குமார் உள்ளிட்ட விருதுநகர் வட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT