அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்: முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றவுடன் இந்த ஆண்டு முதன் முறையாக அனுமதி சேர்க்கைக்கு தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மருத்துவப்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக இந்த கல்வி ஆண்டில் இன்று நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் தகுதி அடிப்படையில் முதல் 3 ரேங்குகளை கைப்பற்றிய மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றவுடன் இந்த ஆண்டு முதன் முறையாக அனுமதி சேர்க்கைக்கு தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் ஜூன் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. மேலும் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. பிஇ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரையும், வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
இன்று தொடங்கிய மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கோவையைச் சேர்ந்த மாணவி ஆர்.ரம்யாலட்சுமி (1169), விழுப்புரத்தைச் சேர்ந்த எம்.சூரியகலா (1139), சேலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.சுருதி ஆகிய மூவரும் முதல் மூன்று ரேங்குகளை பெற்றனர். இவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான அனுமதி சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு0 என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.