ஊராட்சி மன்ற தலைவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல்
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கோதண்டன்(47). இவருக்கு கலைவாணி(40) என்ற மனைவியும், பி.இ முதலாண்டு படிக்கும் வசந்தகுமார்(18) என்ற மகனும், கும்மிடிப்பூண்டி
தற்போதைய செய்திகள்ஊராட்சி மன்ற தலைவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல்
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கோதண்டன்(47). இவருக்கு கலைவாணி(40) என்ற மனைவியும், பி.இ முதலாண்டு படிக்கும் வசந்தகுமார்(18) என்ற மகனும், கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏடூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.கோதண்டனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி அவரது உடலை மருத்துவமனையில் இருந்து வாங்காமல் ஏடூர் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏடூர் பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கோதண்டன்(47). இவருக்கு கலைவாணி(40) என்ற மனைவியும், பி.இ முதலாண்டு படிக்கும் வசந்தகுமார்(18) என்ற மகனும், கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணகுமார்(15) என்ற மகனும் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டனை இருவர் அழைத்துச் சென்றனர். அப்படி சென்றவர் வீடு திரும்பாத நிலையில் கோதண்டனின் தொலைபேசியில் இருந்து யாரோ ஒரு நபர் அவரது வீட்டிற்கு போன் செய்து எளாவூர் அருகே ஏழுகண் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் கால்வாயில் கோதண்டன் விழுந்து கிடக்கிறார் என தகவல் சொல்லி உள்ளனர்.தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது கோதண்டன் அந்த கால்வாய் அருகே இருந்த சிறு தொட்டியில் விழுந்த நிலையில் தலையில் பலத்த காயங்களுடன், வாயில் நுரை தள்ளி இறந்த நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து போலீஸார் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டனின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டனின் மனைவி கலைவாணி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டனர் என்றும், இவரது மரணத்திற்கு ஏடூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெகதீசன், வார்டு உறுப்பினர்கள் நந்தன் மற்றும் சத்தியநாராயணனுக்கு தொடர்பு உள்ளது என புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினார். ஏற்கெனவே தனக்கு செல்போனில் அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாக கோதண்டன் ஜூன்-14ஆம் தேதி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போதே அந்த புகார் குறித்து விசாரணை நடத்தியிருந்தால் இந்த கொலை சம்பவம் தடுக்கப்பட்டு இருக்கும் என அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் காரணமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பு நிலவி வந்த நிலையில் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து கோதண்டனின் உடலை உறவினர்களும், அப்பகுதி மக்களும் பெற மறுத்தனர். அதே நேரம் ஏடூர் சாலைக்கு முன்பு ஏழுகண் பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏடூர் பகுதி மக்கள் சுமார் 300 பேர் குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் எஸ்.பி ரூபேஷ்குமார் மீனா, ஏ.டி.எஸ்.பி செந்தில்குமார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி சிவராஜ் உட்பட போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சுமார் ஒன்றரை மணி நேர சாலை மறியலுக்கு பின்னர் பொதுமக்கள் சமாதானமடையாததால் தடியடி நடத்தி போலீஸார் அவர்களை கலைக்க நேர்ந்தது. இதனை தொடர்ந்து கோதண்டனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஏடூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெகதீசன், வார்டு உறுப்பினர்கள் நந்தன் மற்றும் சத்தியநாராயணன் ஆரம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கோதண்டனின் உடல் மாற்று பாதை வழியே ஏடூரில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அ.தி.மு.க-வை சேர்ந்த ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சதீஷ், ரமேஷ்குமார், கவுன்சிலர்கள் தயாளன், கோபி, அ.தி.மு.க நிர்வாகிகள் அபிராமன், ஸ்ரீதர், முல்லைவேந்தன்,பலரும் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்.