முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ஜூலை 9ல் கண்டன ஆர்ப்பாட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு

காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். தமிழக உழவர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:34 PM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஜூலை 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என காவிரி உரிமை மீட்புக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். தமிழக உழவர் முன்னணி நிர்வாகிகள் சி.ஆறுமுகம், கோ.சிவராமன்,. மதிமுக அ.சோ.செளந்தரராஜன், பா.பாலமுருகளி, மனித நேய மக்கள் கட்சி தியாகு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் விடுதலைசெல்வன், தமிழக இளைஞர் முன்னணி ஆ.குபேரன், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் ஆர்.ராகவேந்திரன், தமிழக மாணவர் முன்னணி வே.சுப்பிரமணியசிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மு.சம்பந்தம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தமிழகத்திற்குரிய காவிரி நிரை பெற்றத் தர மறுக்கும் மத்திய அரசை கண்டிப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற ஜூலை 9-ம் தேதி சிதம்பரம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →