ஸ்ரீநடராஜர் கோயிலில் கானாஞ்சலி இசை விழா!
கானாஞ்சலி நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை சிதம்பம் ப.அகிலா பாட்டும், தில்லை என்.முத்துக்குமரன் வயலின், யு.நடராஜரத்ன தீட்சிதர் மிருதங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் டாக்ட கணேஷின் பாட்டும்,
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசபாபதி சங்கீத கான சபா சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கானாஞ்சலி இசை விழா மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கியது. இந்த இசை விழா மார்ச்.10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கானாஞ்சலி நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை சிதம்பம் ப.அகிலா பாட்டும், தில்லை என்.முத்துக்குமரன் வயலின், யு.நடராஜரத்ன தீட்சிதர் மிருதங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் டாக்ட கணேஷின் பாட்டும், மதுரை எஸ்.பாலசுப்பிரமணியன் வயலின், சிதம்பரம் எஸ்.பாலாசங்கர் மிருதங்கமும், டி.ஹெச்.ஜி. சந்திரசேகர்சர்மா கடம் நிகழ்ச்சியும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதன்கிழமை ஸ்ரீஅபிஷேக்ரகுராம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கேட்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீசபாபதி சங்கீத கானசபா நிர்வாகி சாகித்யகர்த்தா எஸ்.யு. ஐயப்பதீட்சிதர். யு.வெங்கடேசதீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.