மகா சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு பிரசாதம் வழங்கிய மூதாட்டி
மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாசி படைப்பு திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக கொதிக்கும் நெய்யில் கையைவிட்டு அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை 12.01 மணி முதல் சுமார் 2 நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.
தற்போதைய செய்திகள்மகா சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு பிரசாதம் வழங்கிய மூதாட்டி
மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாசி படைப்பு திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக கொதிக்கும் நெய்யில் கையைவிட்டு அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை 12.01 மணி முதல் சுமார் 2 நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாசி படைப்பு திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக கொதிக்கும் நெய்யில் கையைவிட்டு அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை 12.01 மணி முதல் சுமார் 2 நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு ஊரணிபட்டித் தெருவைச் சேர்ந்த பொன்னாயிரம் மனைவி முத்தம்மாள் (70) என்பவர் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு பிரசாதம் வழங்கினார்.
இது குறித்து மூதாட்டி முத்தம்மாள் நமது தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை சாலையில் அமைந்துள்ள பட்டத்தரசியம்மன் கோயிலுக்கு திருவிழாக் காலத்தில் 7 ஆண்டுகள் முளைப்பாரி எடுத்துச் சென்று, கும்மிப்பாடல் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நான் கனவு கண்டேன். அந்தக் கனவாவது: பட்டத்தரசியம்மனிடம், பத்ரகாளியம்மன் எனக்கு கையால் பனியாரம் செய்ய உன்னிடம் வரும் பக்தர்களில் ஒருவரை அனுப்பு. நீ சொன்னதையெல்லாம் கேட்கிறேன் என பட்டத்தரசியம்மனிடம் பத்ரகாளியம்மன் சத்தியம் செய்து கொடுப்பது போல கனவு கண்டேன். மேலும் பட்டத்தரசியம்மன் என்னை, பத்ரகாளிக்கு பனியாரம் சுட அனுப்புவது போலவும் கனவு கண்டேன். கனவு கண்டதில் இருந்து சுமார் 42 ஆண்டுகளாக மார்கழி 1-ம் தேதி முதல் மாசி 26-ம் தேதி வரை 85 நாட்கள் விரதம் இருந்து மகா சிவராத்திரி அன்று இரவு 12 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு பத்ரகாளியம்மனுக்கு படைத்து வருகிறேன். எனக்கு முன்பு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் பணியை நாச்சிக்கிழவி, வள்ளி, மீனாட்சி என்பவர்கள் செய்ததாகவும், தான் நான்காம் தலைமுறையாக இந்த வேலையை செய்து வருவதாயும் கூறினார். எனக்குப் பின்னால் இந்த வேலையை கோயில் பூசாரியாக இருக்கும் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், முருகன் ஆகியோரால்தான் இந்தப் பணியை செய்ய இயலும் என்றார்.
இக் கோயிலின் செயலாளர் சத்திரப்பட்டியைச் சேர்ந்த கே.சுந்தரராஜன் நமது தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து குல தெய்வ கோயில்களிலும் மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று, மாசிப்படைப்பு திருவிழாவை கொண்டாடுவது வழக்கமாக இருந்தாலும், ஒரு கோயிலுக்கு குறைந்தது 100 குடும்பத்தார் முதல் அதிகபட்சமாக 500 குடும்பத்தார் வரை தான் அந்த குறிப்பிட்ட தெய்வத்தை குல தெய்வ வழிபாடு செய்வார்கள். ஆனால் தமிழகத்திலேயே இந்தக் கோயிலில் தான் 1200-க்கும் மேற்பட்ட குடும்பத்தார், ஒரே வழி உறவுக்காரர்களாக வந்து மகா சிவராத்திரி அன்று சுவாமி கும்பிடுகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழிபாட்டிற்கு அருப்புக்கோட்டை, எஸ்.ராமச்சந்திராபுரம், சுந்தரபாண்டியம், அகத்தாபட்டி, சத்திரப்பட்டி, ராஜபாளையம், மதுரை, டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள குடும்பத்தினர் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் மகா சிவராத்திரி அன்று பத்திரகாளியம்மன் கோயிலுக்கு ரூ.70 செலுத்தி, பிரசாசம் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றார். இந்த விழாவைக் காண ஏராளமான பக்தர்கள் மாநிலத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தனர்.