முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறியலில் ஈடுபட முயன்ற 36 பேர் கைது

டெசோ அமைப்பு சார்பில் செவ்வாய்கிழமை அழைப்பு விடுக்கப்படிருந்த பொது வேலை நிறுத்தம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. கடைகள் முழு அளவில் திறந்திருந்தன.

Updated On : 12 மார்ச், 2013 at 1:21 PM
பகிர்:

டெசோ அமைப்பு சார்பில் செவ்வாய்கிழமை அழைப்பு விடுக்கப்படிருந்த பொது வேலை நிறுத்தம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. கடைகள் முழு அளவில் திறந்திருந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மல்லி கு.ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜான்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் தா.தங்கமாங்கனி, தா.ரவிக்கண்ணன் ஆகியோர் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்நிலையம் முன்பு மறியல் செய்ய முயன்ற 36 பேரை போலீஸார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். நகரில் அனைத்துக் கடைகளும் வழக்கம் போல் திறந்திருந்தது. அனைத்து பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கின.

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் என்.பி.சிவராஜ் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 34 பேரை போலீஸார் கைது செய்தனர். வத்திராயிருப்பில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

Advertisement

சுந்தரபாண்டியம்: சுந்தரபாண்டியம் பேரூராட்சி பகுதியில் 50 சதவீத கடைகள் அடைக்கப்படிருந்தது. டெசோ பொது வேலை நிறுத்தம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில்  எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.