முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே விளைநிலத்தில் புகுந்த முதலை

சிதம்பரம் அருகே உள்ள தெற்குசாலியாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலு. இவருக்கு சொந்தமான நிலத்தில் உளுந்து பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வயலில் 8 அடி நீளமுள்ள முதலை படுத்திருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பிடித்து மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் இதுகுறித்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:48 AM
பகிர்:

சிதம்பரம் அருகே விளை நிலத்தில் புகுந்த 8 அடி நீள முதலையை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள தெற்குசாலியாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலு. இவருக்கு சொந்தமான நிலத்தில் உளுந்து பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வயலில் 8 அடி நீளமுள்ள முதலை படுத்திருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பிடித்து மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அருகாமையில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊருக்குள் முதலை புகுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் அக்கிராமத்திற்கு சென்று முதலையை பிடித்து அருகாமையில் உள்ள வக்காரமாரி நீர்தேக்கத்தில் கொண்டு விட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →