முகப்பு
தற்போதைய செய்திகள்

வன்கொடுமைச் சட்டத்தை வலுப்படுத்தக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஓழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.ஞானகுரு முன்னிலை வகித்தார். இதில், தலித் பழங்குடியினருக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடிய வன்கொடுமைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். சாதி மறுப்பு

Updated On : 14 மார்ச், 2013 at 3:32 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:18 PM

விருதுநகரில் எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.ஞானகுரு முன்னிலை வகித்தார். இதில், தலித் பழங்குடியினருக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடிய வன்கொடுமைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூக நீதிக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வருகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைச் செயலாளர் பி.சண்முகம் நிறைவுரை வழங்கினார்.

இப்போராட்டத்தில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், ஆதிதமிழர் பேரவை, தமிழ்புலிகள், அருந்தமிழர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.