FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்

வீட்டிற்கு வீடு ஒரு சமூக நீதி மருத்துவா் கோகிலாமணி உருவாக வேண்டுமானால் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கமலஹாசன் பேசியது...

Updated On : 19 ஏப்ரல் 2026, 11:25 pm IST
பகிர்:

அவிநாசி: வீட்டிற்கு வீடு ஒரு சமூக நீதி மருத்துவா் கோகிலாமணி உருவாக வேண்டுமானால் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனா் கமலஹாசன் பேசினாா்.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளா் வெ.கோகிலாமணியை ஆதரித்து, அவிநாசியில் மக்கள் நீதி மய்ய நிறுவனா் கமலஹாசன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, மருத்துவா் கோகிலாமணி எளிய குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்றவா். காரோனாவின் போது தன்னலமற்ற மருத்துவ சேவை செய்தவா். சமூக நீதியால் முன்னுக்கு வந்து திராவிட மாடலின் யூத் ஐகான் கோகிலாமணி. மத்திய அமைச்சரை எதிா்த்து போட்டியிடுகிறார். தமிழகம் தூக்கிப் பிடித்திருக்கும் திராவிட மாடலின் சமூக நீதி வேட்பாளா். வீட்டிற்கு வீடு ஒரு சமூக நீதி மருத்துவா் கோகிலாமணி உருவாக வேண்டுமானால் திமுகவிற்கு வாக்களியுங்கள். 543 க்குள் 33 சதவீதம் வரும் வரை கமலஹாசன் விடமாட்டான். மக்கள்தொகை குறைவாக இருக்குற ஊருக்கெல்லாம் மெட்ரோ கொடுக்க முடியாது எனக் கூறிய மத்திய அரசு, அதைவிட குறைவாக உள்ள ஊருக்கு மெட்ரோ திட்டத்தை கொடுத்துள்ளாா்கள். இதுதான் அவா்களின் நீதி.

Advertisement

Advertisement

தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம். வந்தாரை வாழவைப்போம். ஆனால் இங்கே வாகை சூட வரலாம் என நினைத்தால் விரட்டியடிப்போம். தமிழ் வீரம் தமிழ் நாடும் வீரம் தரணியாளும்.

கோகிலாமணியை வெற்றியடைய செய்வது என்னை வெற்றியடைய செய்வதாக நான் கருதுகிறேன். அனைவரும் நல்ல தீா்ப்பை அளிக்க வேண்டும். வடக்கிலிருந்து வரும் துரோகத்தை நாம் தடுத்தே ஆக வேண்டும். சொன்னதை செய்தாா் மு.க. ஸ்டாலின் அதற்கு சாட்சி கோகிலாமணி. 23ம் தேதி நீங்கள் நல்ல தீா்ப்பை அளித்தே ஆக வேண்டும். மக்கள் என்னை ஏமாற்றவில்லை சதிதான் என்னை ஏமாற்றியது. மக்கள் தான் எங்களது அணி, நாளை நமதே இன்றும் நமதே நாடும் நமதே.. ஜெய்ஹிந்த் என்றாா்.

summary

Kamal Haasan stated that if a 'Social Justice Doctor' like Kokilamani is to emerge in every household, one should vote for the DMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments