முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயிலில் பொதுமக்களால் கண்டறியப்பட்ட ருத்ராட்ச மரம்!

சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை கழுத்தில் அணிந்து கொள்வது வழக்கம். மருத்துவ குணம் வாய்ந்த ருத்ராட்சம் அணிந்தால் ரத்தஅழுத்தம், மன உளைச்சல் போன்ற பல்வேறு நோய்கள் குணமாகும் என கூறப்படுகிறது. ருத்ராட்சம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:49 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயிலில் சிவனடியார் கொடுத்த தகவலின் பேரில் ருத்ராட்ச மரம் பொதுமக்களால் கண்டறியப்பட்டது. பொதுமக்கள் திரண்டு ருத்ராட்ச மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்து பூஜை செய்து வழிபடுகின்றனர்.
சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை கழுத்தில் அணிந்து கொள்வது வழக்கம். மருத்துவ குணம் வாய்ந்த ருத்ராட்சம் அணிந்தால் ரத்தஅழுத்தம், மன உளைச்சல் போன்ற பல்வேறு நோய்கள் குணமாகும் என கூறப்படுகிறது. ருத்ராட்சம் நேபாளம் பகுதியில் அதிகமாக விளையும். இந்நிலையில் சிவனடியார் ஒருவர் காட்டுமன்னார்கோயில் சிதம்பரம் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் அதிசய நிகழ்வு நடைபெறவுள்ளது எனக்கூறியுள்ளார். இதனை கேட்டு மக்கள் அங்கு சென்று பார்த்த போது அதிகமாக ருத்ராட்சங்கள் காய்த்த ருத்ராட்ச மரம் இருப்பதை கண்டறிந்தனர். இத்தகவல் அறிந்த ஊர் மக்கள் திரண்டு சென்று ருத்ராட்ச மரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.