முகப்பு
தற்போதைய செய்திகள்

மார்ச் 16, 17-ல் பிச்சாவரத்தில் விடியல்விழா:  அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்பு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் எம்ஜிஆர் திட்டில் வருகிற மார்ச் 16, 17-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் விடியல் விழா (DAN FEST- 2013) நடைபெறுகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:49 AM
பகிர்:

சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் எம்ஜிஆர் திட்டில் வருகிற மார்ச் 16, 17-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் விடியல் விழா (DAN FEST- 2013) நடைபெறுகிறது.

விழாவிற்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.கிர்லோஷ்குமார் தலைமை வகிக்கிறார். உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வரவேற்கிறார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விடியல் விழாவை தொடங்கி வைத்துப் பேசுகிறார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, மாவட்ட வன அலுவலர் மு.தியாகராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி சி.ராஜேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (புவனகிரி),  கிள்ளை பேரூராட்சி தலைவர் செ.வித்யாதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மக்கள்-தொடர்பு அதிகாரி கு.தமிழ்செல்வராஜன் நன்றி கூறினார்.

 2004-ம் ஆண்டு  மார்ச் மாதம் அப்போதைய சிதம்பரம் உதவி ஆட்சியராக இருந்த ராஜேந்திரத்னூவால் பிச்சாவரத்தில் விடியல்விழா தொடங்கப்பட்டது. சுனாமியினால் இவ்விழா தொடர்ந்து கொண்டாட முடியாமல் போனது அதன்  பின்னர் ராஜேந்திரரத்னு கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்பு 2008-ம் ஆண்டு விடியல் விழா கொண்டாடப்பட்டது.  அதன் பின்னர் மீண்டும் கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ராஜேந்திரரத்னூ மீண்டும் 2012ம் ஆண்டு மார்ச்17-ம் தேதி பிசசாவரம் எம்ஜிஆர் திட்டில் விடியல்விழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விடியல் விழாவை முன்னிட்டு மார்ச்.16-ம் தேதி மாலை கரகாட்டம், ஓயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுபுறக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மார்ச் 17-ம் தேதி ஞாயிற்றுகிழமை அதிகாலை சூரியஉதயம் நிகழ்ச்சி, பரதநாட்டியம், யோகா மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.