முகப்பு
தற்போதைய செய்திகள்

மாவட்ட வருவாய் அலுவலரின் கார் டிரைவரை காணவில்லை: மனைவி புகார்

விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரின் கார் டிரைவரை காணவில்லை என அவரின் மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் செய்தார்.

Updated On : 15 மார்ச், 2013 at 9:12 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:19 PM

விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரின் கார் டிரைவரை காணவில்லை என அவரின் மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் இந்திரா நகரில் தனது மனைவி அமிர்தவள்ளியுடன் குடியிருந்து வருகிறார் மனோகரன்(31). மேலும், இவர்   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை காலையில் வழக்கம் போல் பணிக்குச் சென்றார். அங்கு அலுவலகத்தில் இருந்து காலையில் 9 மணிக்கு போனில் தொடர்பு கொண்டும் பேசியுள்ளார்.

அதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக வீட்டிற்கு வரவில்லையாம். இது குறித்து உற்றார், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்து விசாரித்து உள்ளார். அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி விருதுநகர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு காணமல் போன டிரைவர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.    

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.