முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே காவலாளியை கட்டிப்போட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கட்டுமானப் பொருள்கள் திருட்டு

சிதம்பரம் அருகே காவலாளியை வாயை பொத்தி கட்டிப்போட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கட்டுமானப் பொருள்களை மர்மஆசாமிகள் திருடிச் சென்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:50 AM
பகிர்:

சிதம்பரம் அருகே காவலாளியை வாயை பொத்தி கட்டிப்போட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கட்டுமானப் பொருள்களை மர்மஆசாமிகள் திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள பூண்டியாங்குப்பத்தில் ஜகந்நாதன் ஹோட்டல் அமைக்க கட்டடம் கட்டி வருகிறார். அதற்காக சிமெண்ட், கம்பி மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை வைத்துள்ளார். பொருள்களை பாதுகாக்க பாலகிருஷ்ணன் (65) என்பவரை காவலாளியாக நியமித்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்மஆசாமிகள் காவலாளி பாலகிருஷ்ணன் வாயை பொத்தி, கட்டிப் போட்டு அங்கிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை திருடிச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜகந்நாதன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.