விருதுநகர் அகதி முகாம் தமிழர்கள் உண்ணாவிரதம்
ஈழப் பிரச்னை மற்றும் ராஜபட்ச மீதான போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:22 PM
ஈழப் பிரச்னை மற்றும் ராஜபட்ச மீதான போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களைச் சேர்ந்தவர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
ஆனைகுண்டம் அகதி முகாமைச் சேர்ந்த 124 குடும்பங்களில் உள்ள 392 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும், விருதுநகரில் உள்ள மற்றொரு அகதிகள் முகாமைச் சேர்ந்த 140 பேர் பேரணியாக வந்து ராஜபட்ச உருவபொம்மையைத் தூக்கிலிட்டுப் போராட்டம் நடத்தினர்.