முகப்பு
தற்போதைய செய்திகள்

மினி பஸ்களில் ஒலிபரப்பப்படும் ஆபாச சினிமா பாடல்கள்: பள்ளி, கல்லூரி மாணவியர்கள் பாதிப்பு

சிதம்பரம் நகரிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சிதம்பரம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, அதுபோன்று சுற்றுப்புற கிராமங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கும், பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:54 AM
பகிர்:

சிதம்பரம் பகுதியில் இயங்கும் மினி பஸ்களில் ஆபாச சினிமா பாடல்கள் அதிக சப்தத்துடன் ஒலிபரப்பப்படுவதால், பஸ்ஸில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

சிதம்பரம் நகரிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சிதம்பரம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, அதுபோன்று சுற்றுப்புற கிராமங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கும், பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களிலிருந்து நகருக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவியர்கள் மினிபஸ்ஸில் வந்து செல்கின்றனர்.

அப்போது மினிபஸ்களில் ஆபாச சினிமா பாடல்களும், காதல் பாடல்களும் ஒலிபரப்பப்படுவதால் மாணவியர்கள் தேர்வுக்கு செல்லும் நிலையில் அந்த பாடல்களினால் பாதிப்படைந்து சரியாக தேர்வு எழுத முடியவில்லை என தெரிவிக்கின்றனர். மேலும் அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதாலும், ஆபாசமான வார்த்தைகள் மற்றும் இரட்டை அர்த்தத்துடன் கொண்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் பஸ்ஸில் அமர்ந்து செல்ல முடியவில்லை என மாணவியர்கள் கூறுகின்றனர். எனவே வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்கண்ட மினி பஸ்களில் சினிமா பாடல்கள் ஒலிபரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.