முதுகுவலியால் அவதி: விஷம் குடித்து தம்பதி தற்கொலை
விருதுநகரில் உள்ள இந்திராநகரில் வசித்துவந்த ஆறுமுகம்(48), அவரது
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:26 PM
விருதுநகரில் உள்ள இந்திராநகரில் வசித்துவந்த ஆறுமுகம்(48), அவரது மனைவி பாண்டியம்மாள் (34) இருவரும் இன்று காலை விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். ஆறுமுகத்துக்கு முதுகுவலி அதிகம் இருந்தததாகத் தெரிகிறது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாத நிலையில், இருவரும் மிகவும் சிரமப்பட்டனராம். இதனால் விஷ மாத்திரை உண்டு இறந்துவிட்டதாகத் தெரிகிறது. இது குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.