முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐக்கிய கிறிஸ்தவ குருத்தோலை பவனி

இயேசு கிறிஸ்து எருசலேம் வீதியில் பவனி வந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சியை நினைவு கூறுவம் வகையில், ஸ்ரீவிலில்லிபுத்தூரில் ஏராளமான கிறிஸ்தவர்கள்

Updated On : 24 மார்ச், 2013 at 12:08 PM
பகிர்:

இயேசு கிறிஸ்து எருசலேம் வீதியில் பவனி வந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சியை நினைவு கூறுவம் வகையில், ஸ்ரீவிலில்லிபுத்தூரில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை கையில் ஏந்திக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஐக்கிய குருத்தோலை பவனி வந்தனர்.இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் பாடுபடுவதற்கு முந்தைய 40 நாட்கள் உபவாசம் இருந்து உலகத்தை ஜெயித்தார். இதனை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் லெந்து காலமாக அனுசரிப்பார்கள். இந்த ஆண்டு இந்த லெந்து காலம் 13.2.21013-ம் தேதி சாம்பற் புதன்கிழமையுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக் ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும், தினமும் அதிகாலையில் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து தேவ ஊழியர்கள் வந்திருந்து சிறப்பு செய்தியளிக்கிறார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபடுவதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை எருசலேம் வீதிகளில் மனுக்குலத்திற்கு தாழ்மையைக் கற்றுக்கொடுப்பதற்காக, தீர்க்கதரிசிகளின் மூலம் முன்னறிவிக்கப்படியே வெற்றி வீரராய் கழுதைக் குட்டியின் மீது பவனி வருவார். அப்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்துக் கொண்டு தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று ஆர்ப்பரிப்பார்கள். இதனை நினைவு கூறுவதற்காக குருத்தோலை பவனி மற்றும், சிறப்பு ஆராதனைகள் உலகெங்கும் இன்று நடைபெறுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து கிறிஸ்து ஐக்கிய குருத்தோலை பவனி சி.எஸ்.ஐ. சாட்சியாபுரம் வட்டகைமன்றத் தலைவர் அருள்திரு கே.முத்துச்செல்வன் மற்றும் ஆர்.சி. மறைவட்ட அதிபர் தந்தை எஸ்.சேவியர்ராஜ் அடிகளார் ஆகியோர் தலைமையில் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளின் வழியே அதில் பங்கேற்றவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்திக் கொண்டு ஓசன்னா, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என கோஷங்களை எழுப்பிச் சென்றனர். பின்னர் பேரணி சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நிறைவு பெற்றது. அங்கு சிறப்பு குருத்தோலை ஞாயிறு ஆராதனை சபைகுரு அருள்திரு கே.முத்துச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. தேனியில் இருந்து வல்லமையின் கோபுரம் ஊழியங்கள் செய்யும் சகோதரர் என்.ராஜேந்திரன், இயேசு கிறிஸ்துவின் இரக்கம் குறித்து சிறப்பு தேவ செய்தியளித்தார். ஆராதனையில் திருச்சபையின் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை கிறிஸ்தவர்கள் பரிசுத்த வாரத்தை அனுசரிக்கிறார்கள். வியாழக்கிழமை புனித வியாழனாக அனுசரிக்கப்படும். அன்றைய தினம் இரவு இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் மேற்கொண்ட கடைசி ராபோஜனத்தை குறிக்கும் நற்கருணை ஆராதனை நடைபெரும். வெள்ளிக்கிழமை புனித வெள்ளி ஆராதனையும், அதனைத்த தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டியையும் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.