ரயில் மறியல்: நாகை.யில் மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கைது
நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கண்மூடித் தனமாகத் தாக்கப்பட்டு வருவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதைக் கண்டித்துமிந்த ரயில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றிலும் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து இன்று காலையில் குவிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 3 ஆயிரம் மீனவர்கள் ரயில் நிலையத்தில் குவிந்து எர்ணாகுளம் விரைவு ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்த போலீஸார் அவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து சீர்காழியிலும் நடைபெற்று வருகிறது.