வேன் உரசியதில் பைக்கில் சென்ற பெண் பலி: ஆண் படுகாயம்
சேலத்தில் இருந்து ஏற்காடு சுற்றிப் பார்க்க வந்த நண்பர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏற்காடு 17 வது வளைவு அருகே வந்தபோது, சேலம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று உரசிச் சென்றதாம். இதில்,
சேலத்தில் இருந்து ஏற்காடு சுற்றிப் பார்க்க வந்த நண்பர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏற்காடு 17 வது வளைவு அருகே வந்தபோது, சேலம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று உரசிச் சென்றதாம். இதில், இருவரும் தடுமாறிக் கீழே விழுந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் அந்தப் பெண் உயிரிழந்தார். அவரது நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அபாய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த நபர் சேலம் அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் (22) என்றும், அவரது நண்பி சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த நிஷாந்தினி
என்றும் தெரியவந்தது.