முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் துண்டிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரத்தை நேற்று இரவு 12.30 மணி அளவில் மாநில மின் துறை துண்டித்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:02 AM
பகிர்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரத்தை நேற்று இரவு 12.30 மணி அளவில் மாநில மின் துறை துண்டித்தது.

கடந்த 23ம் தேதி  ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டதால் சுற்றிலும் இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஆகியன ஏற்பட்டன. எவரும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறாவிட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.

இது குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டது. இதில், புதிதாக இயக்கப்பட்ட கருவி ஒன்றில் இருந்து புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையின் நடவடிக்கைகளை நிறுத்த கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், நேற்று இரவு ஆலைக்கான மின்சாரம் முதல் கட்ட நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.