சிதம்பரம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வீட்டில் திருட்டு!
சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள மாரியப்பாநகரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை திருடிச் சென்றுள்ளனர்.

சிதம்பரம் மாரியப்பாநகரில் வசிப்பவர் தீனா. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு அமெரிக்கா சென்றார். ஏப்.29-ந் தேதி இந்தியா திரும்பிய பேராசிரியர் தீனா செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரேவிலிருந்த 34 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தீனா அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.