சிதம்பரத்தில் பேருந்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி
சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை பெட்ரோல் ஊற்றி மர்மஆசாமிகள் சிலர் எரிக்க முயன்றுள்ளனர்.
சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை பெட்ரோல் ஊற்றி மர்மஆசாமிகள் சிலர் எரிக்க முயன்றுள்ளனர்.
சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில்தெருவில் தனியார் பேருந்து ஒன்று புதன்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேருந்தில் கிளீனர் ராஜா படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மர்மஆசாமிகள் சிலர் பேருந்தின் டயரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு தலைமறைவாயினர். தீயில் டயர் கருகும் வாடை அடிப்பதை அறிந்த கிளீனர் பார்த்து உடனடியாக அருகே இருந்த மணலை போட்டு தீயை அணைத்துள்ளார். தகவல் அறிந்த நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, பேருந்திற்கு தீ வைத்த மர்மஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும் போலீஸார் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் யார், யார் பெட்ரோல் வாங்கியது என கேமரா மூலம் தகவலை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.