முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் பகுதியில் 5 பஸ்களின் கண்ணாடி உடைப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை பல்வேறு பகுதிகளில் 5 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:36 AM
பகிர்:

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை பல்வேறு பகுதிகளில் 5 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கோயம்புத்தூர்-சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ், காரைக்கால்-சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் ஆகிய இரு பஸ்களின் கண்ணாடி மர்மநபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. இதேபோன்று சிதம்பரம் அருகே கடலூர் நெடு்ஞ்சாலையில் பெரியகுமட்டி ஆந்திராவைச் சேர்ந்த தனியார் பஸ் கண்ணாடியும், கரிக்குப்பம் அருகே தனியார் பஸ் கண்ணாடியும் உடைக்கப்பட்டன. பரங்கிப்பேட்டை ரயிலடி அருகே தனியார் பஸ்ஸின் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. சிதம்பரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.