முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் 4 பஸ்களின் கண்ணாடி உடைப்பு: டிரைவர் காயம்; மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரத்தில் 4 அரசு பஸ்களின் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கல்வீச்சு சம்பத்தில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் காயமுற்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:42 AM
பகிர்:

சிதம்பரத்தில் 4 அரசு பஸ்களின் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கல்வீச்சு சம்பத்தில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் காயமுற்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வெள்ளிக்கிழமை காலை 12 மணிக்கு சிதம்பரம்-சென்னை அரசு போக்குவரத்துக்கழக பஸ்ஸின் பின்புறக் கண்ணாடி மர்ம நபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. மற்றொரு சம்பவமான சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் பாலம் அருகே வியாழக்கிழமை இரவு சென்னை-கும்பகோணம் சென்ற அரசு பஸ்ஸின் கண்ணாடி மர்ம நபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பஸ் டிரைவர் ராஜதுரை காயமுற்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிதம்பரம் அருகே விபீஷணபுரம் எனுமிடத்தில் அளக்குடி-சிதம்பரம் சென்ற டவுன் பஸ்ஸின் கண்ணாடியும், கடவாச்சேரி எனுமிடத்தில் சிதம்பரம்-மகேந்திரபள்ளம் செல்லும் அரசு பஸ்ஸின் கண்ணாடியும் மர்ம நபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் மற்றும் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.