விருதுநகரில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் படிப்பு விண்ணப்பங்கள் விநியோகம்
விருதுநகர் மாவட்டத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடர்ந்து விநியோகிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடர்ந்து விநியோகிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களின் விநியோகம் 59 மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இப்பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 20-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இது வரையில் மந்தமாக இருந்த விநியோகம், பிளஸ்2 தேர்வு முடிவுக்கு பின்னர் மும்முரமாக நடந்து வருகிறது.
இதில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ராஜபாளையம் பி.ஐ.சி.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் ஆகிய இரண்டு மையங்களில் விநியோகம் நடைபெற்று வருகிறது. அதில், வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மையத்திற்கு மொத்தம் 2700 விண்ணப்பங்கள் வந்திருந்தது. இதுவரையில் 2400 விண்ணப்பங்கள் வரையில் மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராஜபாளையம் பி.ஐ.சி.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரியில் இதுவரையில் 2502 விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் வெளியான பின் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருவதாக பாலிடெக்னிக் கல்லூரிகளின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.