போலீஸார் போல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் கொள்ளை
போலீஸ்காரர் போலும், உதவுவது போலும் நடித்து, மூதாட்டியிடம் 12 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
போலீஸ்காரர் போலும், உதவுவது போலும் நடித்து, மூதாட்டியிடம் 12 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வாடியான்பேட்டை அருகே உள்தெருவில் வசித்து வருபவர் புவனேஸ்வரி. 68 வயதாகும் ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், இன்று காலை இட்லி மாவு வாங்குவதற்காக வெளியில் சென்றார்.
அப்போது, 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து, அருகே இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும், மக்கள் பரபரப்பாக இருப்பதாலும், போலீஸாராகிய தாங்கள் அங்கே சோதனை நடத்திவிட்டு, குற்றவாளிகளை தேடிக் கொண்டு செல்வதாகவும், எனவே நகையைக் கழற்றி, ஒரு பேப்பரில் சுற்றி பையில் போட்டுக் கொள்ளவும் என்றும் கூறியுள்ளனர். மேலும், அவ்வாறு அந்த மூதாட்டி செய்தவுடன், நகையைப் பெற்றுக் கொண்ட அவர்கள், போலீஸ் ஸ்டேஷனில் வந்து நகையை வாங்கிக் கொள், நாங்கள் முன்னே செல்கிறோம் என்றும் கூறி, அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனராம்.
Advertisement
நேரம் ஆனவுடன் தான் ஏமாற்றப்பட்டதையும் தன்னிடம் இருந்து நகையைப் பறிக்கவே இவர்கள் திட்டம் இட்டதையும் கண்டு புவனேஸ்வரி போலீஸில் புகார் அளித்தார். இதனை விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.