முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து மாணவர் பலி; 5 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சூளக்கரை பகுதியில் பள்ளிக்கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து மாணவர் ஒருவர்  பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:15 PM

விருதுநகர் மாவட்டம் சூளக்கரை பகுதியில் பள்ளிக்கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து மாணவர் ஒருவர்  பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் சூளைக்கரை சேவியர்ஸ் மெட்ரிக் பள்ளியில் விடுமுறை நாட்களை முன்னிட்டு பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. மேல் தளத்தில் காங்கிரீட் போட்ட இடத்தில் அதன் கீழ் தளத்தில் முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த கட்டைகளைப் பிரித்து எடுத்துவந்தனர். அப்போது, மேல் தளத்தில் கான்கிரீட் போட்ட இடத்தில், சுற்றுச் சுவர் கட்டுவதற்காக செங்கற்களை அடுக்கி வைத்துள்ளனர். அதன் பாரம் தாங்காமல், கான்கிரீட் கீழே சரிந்து விழுந்தது. இதில், சுப்பையா நாடார் பள்ளியில் படிக்கும் மாணவர் மாரிக்கனி என்பவர் உயிரிழந்தார். அவர் விருதுநகர் குமாராபுரம்  பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்து, இந்த வருடம் தேர்வு எழுதியுள்ளார்.

இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். பாண்டி, பிரபு, வெங்கடேஷ், ஜீவரத்தினம், திருவேங்கடம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பாண்டி பிரபு, வெங்கடேஷ் மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement

மற்ற இருவரும் விருதுநகர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து சூளைக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.