முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி கண்ணாடி உடைப்பு!

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்ஸின் கண்ணாடியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்துவிட்டு தலைமறைவாயினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:45 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்ஸின் கண்ணாடியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்துவிட்டு தலைமறைவாயினர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஜாமினில் வெளி வந்த பின்னரும் பஸ் மீது கல்வீசி தாக்கும் சம்பவம் தொடருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் பஸ் மீது கல்வீசி தாக்கிவிட்டு தலைமறைவானார்கள். இதில் பஸ்ஸின் முன்புறக் கண்ணாடி உடைந்து சேதமானது. இதனையடுத்து பஸ்ஸில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.