சிதம்பரம் கோயிலுக்கு வந்த கேரளா ஆசிரியையிடம் 8 பவுன் செயின் பறிப்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சுற்றுலா வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியையிடம் தங்கும் விடுதியில் மர்மநபர் ஒருவர் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சுற்றுலா வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியையிடம் தங்கும் விடுதியில் மர்மநபர் ஒருவர் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
கேரளா மாநிலம் பந்தனம்திட்டா மாவட்டம் மங்கன்தரம்கூனி பகுதியைச் சேர்ந்த ஜெகன்சந்திரபாபு மனைவி லேகாகுமாரி (48). இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 42 பயணிகளிடம் பேருந்தில் தமிழகத்திற்கு 4 நாள்கள் சுற்றுலா பயணமாக வந்துள்ளார். திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு செவ்வாய்க்கிழமை இரவு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை பார்க்க வந்தனர். கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த லேகாகுமாரி காலை அறைக் கதவை திறந்து வெளியே வந்த போது மர்மநபர் ஒருவர் அவரது கழுத்திலிருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவானார். இதுகுறித்து லேகாகுமாரி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.