முகப்பு
தற்போதைய செய்திகள்

தேசத் துரோக வழக்கு போட்டாலும் கவலையில்லை: சீமான்

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினேன் என்று கூறி தேசத் துரோக வழக்கு போட்டாலும் கவலையில்லை என்று கூறினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Updated On : 18 மே, 2013 at 5:40 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:18 PM

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினேன் என்று கூறி தேசத் துரோக வழக்கு போட்டாலும் கவலையில்லை என்று கூறினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய சீமான்,

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசினேன் என்று என் மீதுப் வழக்கு போடுவர். பிரிவினைவாதத் தலைவர்களைக் கொண்டு கூட்டம் நடத்துகிறேன், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசினேன் என்று வழக்கு போடுவர். என் மீது வழக்கு போட்டாலும் கவலையில்லை. முன்னர் திட்டமிட்டபடி பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் திடலில் நடப்பதற்குப் பதிலாக உள்ளரங்குக்குள் நடைபெறும். கூட்டத்தை நடத்தியே தீருவோம்...

Advertisement

- என்று பேசினார் சீமான்.

மதியம் கூட்டத்தில் பேசிய அவர், பின்னர் சற்று நேரம் கடந்து மீண்டும் மேடையில் பேசினார். இன்று இரவும் கூட்ட முடிவில் பேசுவேன் என்று கூறினார்.

இந்நிலையில், கூட்டத்துக்கு மாலை 6 மணி வரைதான் அனுமதி அளித்திருப்பதாகக் கூறி, எஸ்.பி., ராதிகா மண்டபத்துக்கு வெளியில் ஜீப்பில் காத்திருக்கிறார். 

இவர்கள் தங்கள் கூட்டத்தை 6 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்; இல்லை என்றால் கைது செய்வோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியைச் சுற்றிலும் போலீஸார் சுமார் 200 பேர் வரை குவிக்கப்பட்டுள்ளனர்.

மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 300 பேர் வரை உள்ளனர். மேலும், இரவு பத்து மணி வரை கூட்டம் நடைபெறும்; கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பேசுவர்  என்று சீமான் உறுதியாகக் கூறியதால், எந்நேரமும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.