முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே இருகார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஓருவர் சாவு, 10 பேர் காயம்

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். 10 பேர் காயமுற்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:49 AM
பகிர்:

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். 10 பேர் காயமுற்றனர்.

சென்னை கொளத்தூர் தன்ராஜ்புரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (28) உள்ளிட்ட 6 பேர் யுனிகார்ன் காரில் சிதம்பரத்தில் நடைபெறும் திருமண வரவேற்பில் பங்கேற்க வந்துள்ளனர். அப்போது சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ராகவேந்திரா கல்லூரி அருகே இவரது காரும், எதிரே வந்த குவாலிஸ் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இவ்விபத்தில் ஆனந்தகுமார் (28) சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த தினேஷ்குமார் (24), அப்பாஸ் (30), ஜோசிவா (26), ஸ்ரீகாந்த் (24), மேரி (26) ஆகிய 5 பேர் காயமுற்று அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குவாலிஸ் காரில் வந்த நாகை மாவட்டம் சீர்காழி நாககன்னி குப்பத்தைச் சேர்ந்த முத்து (36), முகிலன் (11), ஜீவஸ்ரீ (9), ஜெயச்சந்திரன் (31), பாரத் (24) ஆகிய 5 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.