முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு

சிதம்பரம் பகுதியில் அதிகரித்து வரும் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்டவை தடுக்க முடியாததையும், மக்கள் பிரதிநிதிகள் மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் சிதம்பரம் கோட்ட காவல்துறையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:50 AM
பகிர்:

சிதம்பரம் காவல்துறையை கண்டித்து மே 21-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் பகுதியில் அதிகரித்து வரும் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்டவை தடுக்க முடியாததையும், மக்கள் பிரதிநிதிகள் மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் சிதம்பரம் கோட்ட காவல்துறையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேலவீதி அண்ணாசிலை அருகே  நாளை(மே 21) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும். ஆர்ப்பாட்டத்தில் அறிவித்திருந்தது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றுவார் என அறிவித்திருந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.

இதேபோன்று இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அன்னிய நிறுவனங்களை கண்டித்தும், விலைவாசி உயர்வு, கல்வி நிலையங்களின் கட்டணக் கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் மே 24-ம் தேதி தெற்குசன்னதியிலிருந்து ஊர்வலமாக சென்று வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கும் போலீஸார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் அறிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →