பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை மரணம் : உறவினர்கள் முற்றுகை
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கவனக் குறைவால் குழந்தை மரணம் அடைந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கவனக் குறைவால் குழந்தை மரணம் அடைந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பாலூர் மெயின்ரோடு தொட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பூங்கொடி (20). பூங்கொடி நிறைமாத கர்பிணியாக இருந்தார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு பிரசவம் நடந்தது. ஆனால், குழந்தை இறந்தே பிறந்ததால், அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம். இது போல் அதிகமான சம்பவங்கள் நடக்கின்றன. யாரும் ஒழுங்காக பணியாற்றுவதில்லை என்று கூறி உறவினர்கள் கோஷம் எழுப்பினர். மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.