முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின நாள் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின நாள் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அலுவலர்கள் அனைவரும் பங்கேற்று  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, நேர்முக உதவியாளர்(பொது) அருமைநாயகம்வரகுணராஜ், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் கருப்பாயி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) பீபீஜான், ஆட்சியர் அலுவலக மேலாளர் ஜான்சன், துணை ஆட்சியர்(சிறப்பு திட்டங்கள்) ஜெயஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் கருணாகரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.