கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்: அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு
கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பொதுமக்களின் தேவையை நிறைவேற்ற கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என வெள்ளிக்கிழமை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பொதுமக்களின் தேவையை நிறைவேற்ற கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என வெள்ளிக்கிழமை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கடையம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவி அ. சீனிவாசகி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பொ. லோகநாயகி முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் சண்முகவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் மு. இந்திரா மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தியாகராஜன், வன்னியநம்பி, முத்தையா, ராசு, ஜான்முத்தையா, கணேசன், மகாலிங்கம், எஸ்.வி. முருகேசன், மாரியம்மாள்,
பாக்கியலட்சுமி, பி. கணேசன், லட்சுமணன், அன்னபாக்கியம் கலந்து கொண்டனர்.
ஊராட்சிகளில் மக்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் அபாயகரமான நிலையில் காணப்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளிம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் குடிநீர் திட்டங்கள் பாரமரிக்கப்படவில்லை.
மேலும் ஒன்றியக்குழு கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. அதிகாரிகள் பங்கேற்காத காரணத்தால் மக்களின் தேவைகள், குறைகளை தெரிவிக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் அடுத்த கூட்டத்தில் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் தங்கள் பகுதியி்ல் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.