அண்ணாமலைப் பல்கலை விடைத் தாள்கள் சேதம் ஏற்படவில்லை: பல்கலை நிர்வாகி
சிதம்பரம் அருகே சாலையில் கிடந்து கண்டெடுக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக விடைத்தாள்கள் சேதம் ஏதும் ஏற்படாமல் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே சாலையில் கிடந்து கண்டெடுக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக விடைத்தாள்கள் சேதம் ஏதும் ஏற்படாமல் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் எறும்பூர் எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை மாலை சாலையில் கிடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக விடைத்தாள் பார்சல்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு சேத்தியாத்தோப்பு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பார்சல்கள் பல்கலைக்கழகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவிக்கையில் வேலூரிலிருந்து விருத்தாசலத்தில் பல்கலைக்கழக விடைத்தாள்கள் ஆர்.எம்.எஸ் தபால் துறை மூலம் அனுப்பப்பட்டது. இந்த விடைத்தாள்கள் கொண்ட பார்சலை தபால் துறையினர் தவறவிட்டுள்ளனர். பின்னர் அந்த பார்சல்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு போலீஸார் மூலம் வந்து சேர்ந்தது. பார்சலில் உள்ள பேப்பர்கள் எதுவும் சேதம் ஏற்படவில்லை. இனி வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பாக எடுத்து வருவது குறித்து தபால்துறை உயரதிகளை அழைத்து சனிக்கிழமை பல்கலைக்கழகத்தில் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.